வீரவாகுபுரத்தில்கால்நடை சிறப்பு சுகாதார விழிப்புணர்வு மருத்துவ முகாம்


வீரவாகுபுரத்தில்கால்நடை சிறப்பு சுகாதார விழிப்புணர்வு மருத்துவ முகாம்
x
தினத்தந்தி 22 Dec 2022 12:15 AM IST (Updated: 22 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

வீரவாகுபுரத்தில் கால்நடை சிறப்பு சுகாதார விழிப்புணர்வு மருத்துவ முகாம் நடந்தது.

தூத்துக்குடி

உடன்குடி:

உடன்குடி யூனியனுக்கு உட்பட்ட சீர்காட்சி ஊராட்சி வீரவாகுபுரத்தில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. உடன்குடி யூனியன் குழு தலைவர்பாலசிங் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். கால்நடை பராமரிப்பு துறை திருச்செந்தூர் கோட்ட உதவி இயக்குனர் செல்வகுமார் சிறப்புரையாற்றினார். கன்று, கால்நடை வளர்ப்பில் சிறந்துவிளங்கிய விவசாயிக்கு விருது வழங்கப்பட்டது. உடன்குடி கால்நடை உதவி மருத்துவர் சத்யா கால்நடைகளுக்கு சிகிச்சை, குடற்புழு நீக்கம், கருவூட்டல், மடி நோய்க்கு சிகிச்சை அளித்தார். இம்முகாமில் வெறிநாய் தடுப்பூசி போடப்பட்டது. கால்நடைகளுக்கு தாது உப்பு கலவை வழங்கப்பட்டது. சுமார் 240 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் .சீர்காட்சி பஞ்சாயத்து தலைவர், துணைத் தலைவர், கால்நடை ஆய்வாளர் செல்வராஜ், கால்நடை பராமரிப்பு உதவியாளர் வசந்தா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story