விஜய கரிசல்குளத்தில் முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு


விஜய கரிசல்குளத்தில் முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x

முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

விருதுநகர்

தாயில்பட்டி,

வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜய கரிசல்குளத்தில் மாத கிருத்திகையை முன்னிட்டு வழிவிடு பாலமுருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக சுவாமிக்கு பால், இளநீர், பஞ்சாமிர்தம், திருநீறு உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் அபிேஷகம் நடந்தது. அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதேபோல துலுக்கன்குறிச்சி வாழைமர பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில் குழந்தை வரம் வேண்டியும், திருமண தடை நீங்கவும் சிறப்பு யாகம் நடந்தது. பழைய ஏழாயிரம் பண்ணை பழனி ஆண்டவர் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.


Next Story