விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாணம்


விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில்  சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாணம்
x
தினத்தந்தி 1 Nov 2022 12:15 AM IST (Updated: 1 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

தூத்துக்குடி

எட்டயபுரம்:

விளாத்திகுளத்தில் அமைந்துள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் கந்தசஷ்டி விழா நடைபெற்று வந்தது.

சுப்பிரமணிய சுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணத்தை முன்னிட்டு நேற்று அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டது. சுப்பிரமணியசுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

பின்னர், மலர்களால் அலங்கரிக்கப்பட்டு திருமண கோலத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்பாள், வள்ளி அம்பாள் ஆகியோர் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இதனைத்தொடர்ந்து மங்கள இசை முழங்க சுப்பிரமணிய சுவாமி, வள்ளி தெய்வானை தெய்வங்களுக்கு மாங்கல்ய தானம் செய்து திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு தீபாராதனை, பூஜை நடந்தது. இதில் விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story