விளாத்திகுளம் பள்ளியில் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி


விளாத்திகுளம் பள்ளியில்  மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி
x
தினத்தந்தி 29 Oct 2022 12:15 AM IST (Updated: 29 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

விளாத்திகுளம் பள்ளியில் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி நடந்தது.

தூத்துக்குடி

எட்டயபுரம்:

விளாத்திகுளம் அம்பாள் வித்யாலயா பள்ளியில் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி நடந்தது. போட்டியை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜீ.வி.மார்கண்டேயன் தொடங்கி வைத்தார். இதில் தூத்துக்குடி மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பால்ச்சாமி, உடற்கல்வி ஆசிரியர் வையணன், விளாத்திகுளம் தி.மு.க. மத்திய ஒன்றியச் செயலாளர் ராமசுப்பு, விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், மகேந்திரன் உள்பட விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், விளாத்திகுளம் அருகே உள்ள கெச்சிலாபுரம் கிராமத்திலுள்ள அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் மற்றும் கிராம மக்கள் இணைந்து ரூ.30 லட்சம் மதிப்பில் புதிதாக 5 வகுப்பறைகள் கட்ட ஏற்பாடு செய்துள்ளனர். இந்த வகுப்பறைகள் கட்டும் பணிக்கான பூமி பூஜையை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் குளத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் மாலதி செல்ல பாண்டியன், விளாத்திகுளம் தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்ன மாரிமுத்து, தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இமானுவேல், பள்ளி தலைமை ஆசிரியை பாண்டியம்மாள் மற்றும் கெச்சிலாபுரம் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.


Next Story