வைகை அணை வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில்விவசாயிகளுக்கு பயிற்சி
ஆண்டிப்பட்டி அருகே வைகை அணை ஆராய்ச்சி நிலையத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
தேனி
ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் வேளாண் ஆராய்ச்சி நிலையம் உள்ளது. இங்கு தேசிய வேளாண்மை வளர்ச்சி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பண்ணை எந்திரமயமாக்குதல் மற்றும் வேளாண் வளர்ச்சி திட்டம் குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பேராசிரியர்கள் மதன் மோகன், கீதா ராணி, பரமேஸ்வரி மற்றும் சுதாகர் ஆகியோர் கலந்து கொண்டு தொழில்நுட்பம் குறித்து பேசினர். இதில் விவசாயிகள் கலந்து கொண்டு நெல் நடவு எந்திரம் மற்றும் நாற்று தட்டுகளை பார்வையிட்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஆராய்ச்சி நிலைய தலைவரும், பேராசிரியருமான மதன் மோகன் செய்திருந்தார்.
Related Tags :
Next Story