வில்லிசேரி கிராமத்தில் மழைக்கு மக்காச்சோள பயிர்கள் சேதம்
வில்லிசேரி கிராமத்தில் மழைக்கு மக்காச்சோள பயிர்கள் சேதம் அடைந்துள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. ஆறுதல் கூறினார்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே வில்லிசேரியில் கடந்த 28-ந் தேதி மாலையில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் 300 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோள பயிர்கள் சாய்ந்து சேதமடைந்தன. நேற்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. சேதமடைந்த பயிர்களை பார்வையிட்டு, விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார். அப்போது வேளாண்மை இணை இயக்குனர் முகைதீன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்) நாச்சியாரம்மாள், தாசில்தார் சுசீலா, வேளாண்மை உதவி இயக்குனர் சீ.நாகராஜ், வேளாண் அலுவலர் காயத்ரி, உதவி அலுவலர் செல்வராஜ், பஞ்சாயத்து தலைவர் வேலன், துணைத் தலைவர் காசிராஜன், எலுமிச்சை விவசாயிகள் சங்கத் தலைவர் பிரேம்குமார் மற்றும் விவசாயிகள் உடனிருந்தனர். பின்னர் அவர் கூறுகையில், வில்லிசேரி பகுதியில் மழைக்கு 300 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோள பயிர்கள் சேதமடைந்துள்ளன. இதனை வேளாண்மை துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும, என்றார்.