பணியின்போது தவறி விழுந்து கட்டிட தொழிலாளி சாவு
தேவாரம் அருகே பணியின்போது தவறி விழுந்த கட்டிட தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
தேனி
தேவாரம் அருகே உள்ள சிலமலை டி.எஸ்.பி. காலனியை சேர்ந்தவர் ரஞ்சித் (வயது 35). கட்டிட தொழிலாளி. நேற்று முன்தினம் இவர், தேவாரம் ரெங்கநாதபுரத்தில் ஒரு வீட்டில் டைல்ஸ் பதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் டைல்ஸ் வழுக்கி தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேவாரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து தேவாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story