கராத்தே போட்டியில் மாணவர்கள் சாதனை


கராத்தே போட்டியில் மாணவர்கள் சாதனை
x

கராத்தே போட்டியில் மாணவர்கள் சாதனை படைத்தனர்.

ராமநாதபுரம்

பரமக்குடி,

சென்னை அருகே பரங்கி மலையில் 14-வது மாநில அளவிலான கொபுகான் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இதில் பரமக்குடி பள்ளி மாணவர்கள் 8 பேர் பயிற்சியாளர் மணிகண்டன் பிரபு தலைமையில் போட்டிகளில் பங்கேற்றனர். ஆண்கள் பிரிவில் 8 வயது முதல் 9 வயதுக்கு உட்பட்ட கட்டா பிரிவில் வினோ பாலன் 2-வது இடமும், 14 முதல் 15 வயது குமித்தேயில் ஆதிநாராயணன் 3-வது இடமும், 16 முதல் 17 வயது குமித்தேயில் ஜெய சண்முகராஜா 3-வது இடமும், அபுல் மகாசின் குமித்தேயில் முதலிடமும், கட்டாவில் 3-வது இடமும் பெற்றனர். மேலும் பெண்கள் பிரிவில் 11 வயது பிரிவில் அனுஸ்ரீ கட்டா மற்றும் குமித்தேயில் 2-ம் இடம் பெற்றுள்ளார். தங்கம், வெள்ளி, வெண்கலம், பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் பெற்ற மாணவர்களுக்கு பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் பாராட்டு தெரிவித்தனர்.


Next Story