ஆதார் சேவை மையத்தில் குவிந்த பொதுமக்கள்


ஆதார் சேவை மையத்தில் குவிந்த பொதுமக்கள்
x
திருப்பூர்

திருப்பூர்:

கோடை விடுமுறைக்குப்பின் தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக பள்ளி சேர்க்கை மற்றும் பல்வேறு பணிகளுக்காக ஆதார் கார்டுகளின் தேவை உள்ளது. இதனால் தற்போது மாவட்டம் முழுவதும் உள்ள ஆதார் சேவை மையம் மற்றும் இ-சேவை மையங்களில் பொதுமக்கள் ஆதார் தொடர்பான சேவைகள் பெறுவதற்காக அதிக அளவில் செல்கின்றனர். குறிப்பாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஆதார் சேவை மையத்திற்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று ஏராளமானவர்கள் தங்களின் குழந்தைகளுடன் ஆதார் மையத்திற்கு வந்திருந்தனர். புதிய ஆதார் அட்டைக்கு விண்ணப்பித்தல், முகவரி மாற்றம், பெயர் திருத்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான சேவைகளுக்காக அவர்கள் விண்ணப்பித்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் அவர்கள் ஆதார் மையத்தின் வெளியே நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

---------


Next Story