அத்திக்கடவு- அவினாசி திட்ட சோதனை ஓட்டம் மூலம் காவிலிபாளையம் குளத்துக்கு வந்த தண்ணீர்
அத்திக்கடவு- அவினாசி திட்ட சோதனை ஓட்டம் மூலம் காவிலிபாளையம் குளத்துக்கு தண்ணீா் வந்தது.
ஈரோடு
புஞ்சைபுளியம்பட்டி
புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள காவிலிபாளையத்தில் குளம் ஒன்று உள்ளது. 400 ஏக்கர் பரப்பளவிலான இந்த குளம் அத்திக்கடவு- அவினாசி திட்டத்தில் இணைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சோதனை ஓட்டம் மூலம் இந்த குளத்துக்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டது. குளத்துக்கு தண்ணீர் வந்தது பற்றிய தகவல் அறிந்ததும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் காவிலிபாளையம் குளம் உள்ள பகுதிக்கு வந்தனர். பின்னர் அவர்கள் குளத்துக்கு வந்த தண்ணீரை பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். அத்திக்கடவு- அவினாசி திட்டம் மூலம் காவிலிபாளையம் குளம் நிரம்பினால் அந்த பகுதியில் உள்ள நிலத்தடி நீர்மட்டம் உயரும் என அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.
Related Tags :
Next Story