காளகஸ்தீஸ்வரர் கோவிலில் தருமபுரம் ஆதீனம் சாமி தரிசனம்


காளகஸ்தீஸ்வரர் கோவிலில் தருமபுரம் ஆதீனம் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 12 March 2023 12:15 AM IST (Updated: 12 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

காளகஸ்தீஸ்வரர் கோவிலில் தருமபுரம் ஆதீனம் சாமி தரிசனம் செய்தனர்.

நாகப்பட்டினம்

நாகை மாவட்டம் புதுப்பள்ளியில் காளகஸ்தீஸ்வரர் ஞானாம்பிகை கோவில் உள்ளது. இக்கோவிலில் தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் சாமி தரிசனம் செய்தார். முன்னதாக அவருக்கு புதுப்பள்ளி பொதுமக்கள் சார்பாக பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. சாமி தரிசனத்தை தொடர்ந்து அவர் பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். அப்போது கோவில் சிதிலம் அடைந்து உள்ளதால் திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்கு நடத்துவதற்கு அறிவுறுத்தினார்.


Next Story