மாட்டு தொழுவமாக மாறிய அதிராம்பட்டினம் பஸ் நிலையம்


மாட்டு தொழுவமாக மாறிய அதிராம்பட்டினம் பஸ் நிலையம்
x

அதிராம்பட்டினம் பஸ் நிலையம் மாட்டு தொழுவமாக மாறி வருகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர்

அதிராம்பட்டினம்:

அதிராம்பட்டினம் பஸ் நிலையம் மாட்டு தொழுவமாக மாறி வருகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஸ் நிலையம்

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தை சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளன. இந்த கிராம மக்கள் பயன்பாட்டுக்காக அதிராம்பட்டினத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பஸ் நிலையம் கட்டப்பட்டது.

இந்த பஸ் நிலையத்துக்கு பட்டுக்கோட்டை, பேராவூரணி, திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை மற்றும் திருச்சி, தஞ்சை, நாகை மாவட்ட பகுதிகளில் இருந்து தினமும் அரசு, தனியார் பஸ்கள் வந்து செல்கின்றன. இந்த நிலையில் அதிராம்பட்டினம் பஸ் நிலையத்துக்கு தினமும் இரவு ஏராளமான மாடுகள் திரண்டு நிற்கின்றன.

மாட்டு தொழுவமாக...

அவை இரவு முழுவதும் பஸ் நிலையத்தில் ஓய்வு எடுத்துக்கொள்கின்றன. இதனால் பஸ் நிலையம் மாட்டு தொழுவமாக மாறி வருவதாக பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர். மாடுகள் ஆங்காங்கே படுத்து கிடப்பதால் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து மாடுகள் பஸ் நிலையத்துக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.

இதைப்போல மெயின் ரோடு, கிழக்கு கடற்கரைச் சாலை உள்ளிட்ட பொது இடங்களில் மாடுகளை திரியவிடுபவர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story