காரைக்குடி மாணவர்கள் சாதனை
மண்டல அளவிலான தடகள போட்டி காரைக்குடி மாணவர்கள் சாதனை படைத்தனர்.
காரைக்குடி,
அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான மண்டல அளவிலான தடகள போட்டிகள் கே.எல்.என். என்ஜினீயரிங் கல்லூரியில் நடைபெற்றது. காரைக்குடி சிவில் 4-ம் ஆண்டு மாணவன் அஜித் 10 ஆயிரம் மற்றும் 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் பெற்றார். 4-ம் ஆண்டு மெக்கானிக்கல் பிரிவு மாணவன் பிரகாஷ்ராஜ் 20 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கமும், 3-ம் ஆண்டு சிவில் மாணவன் முத்துக்கிருஷ்ணன் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப்பதக்கமும், 2-ம் ஆண்டு சிவில் பிரிவு மாணவன் சரண் 400 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளி பதக்கமும் பெற்றனர். 4x400 தொடர் ஓட்டத்தில் மாணவர்கள் கார்த்திக், துர்கேஷ், ஆதித்யன், சரண் குழுவினர் தங்கப்பதக்கம் பெற்றனர். சாதனை படைத்த மாணவர்களை கல்லூரியின் சேர்மன் அய்யப்பன், கல்வி இயக்குனர் நிக்சன் அசாரியா, உடற்கல்வி இயக்குனர் பழனியப்பன் ஆகியோர் பாராட்டினர்.