குத்தாலம் அரசு பள்ளியில் தடகள போட்டி
குத்தாலம் அரசு பள்ளியில் தடகள போட்டி ராஜகுமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் குறுவட்ட அளவிலான தடகள போட்டிகள் நடந்தது. இதில் 14, 17, 19 வயது கொண்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஈட்டி எறிதல், ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் ஆரோக்கியராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர் சீதாலட்சுமி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் காந்திமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி மேலாண்மை குழு தலைவர் பிரியா விஜய் வரவேற்றார். ராஜகுமார் எம்.எல்.ஏ. ஒலிம்பிக் சுடரை ஏற்றி வைத்து போட்டிகளை தொடங்கி வைத்தார். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் குத்தாலம் ஒன்றியக்குழு தலைவர் மகேந்திரன், தி.மு.க. குத்தாலம் வடக்கு ஒன்றிய செயலாளர் வைத்தியநாதன், குத்தாலம் பேரூராட்சி தலைவர் சங்கீதா மாரியப்பன், பள்ளி மேலாண்மை குழு துணை தலைவர் மேனகா கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் சுவாமிநாதன் நன்றி கூறினார்.