சேலத்தில் மாணவிகளுக்கு தடகள போட்டி


சேலத்தில் மாணவிகளுக்கு தடகள போட்டி
x
தினத்தந்தி 21 Sept 2022 3:31 AM IST (Updated: 21 Sept 2022 3:48 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் மாணவிகளுக்கு தடகள போட்டி நடந்தது.

சேலம்

சேலம்

சேலம் ஊரக கல்வி மாவட்டம் 'பி' மையம் சார்பில் 2022-23-ம் கல்வி ஆண்டுக்கான குடியரசு தின தடகள போட்டி மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. அதன்படி முதல் கட்டமாக மாணவர்களுக்கான தடகள போட்டிகள் நடைபெற்றது. 2-ம் நாளான நேற்று மாணவிகளுக்கான தடகள போட்டிகள் நடைபெற்றன. இதில் 100, 200, 400 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடந்தது. அதே போன்று நீளம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு தடகள போட்டிகள் நடைபெற்றன. இதில் மாணவிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story