கடலூரில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான தடகள போட்டிகள்


கடலூரில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான தடகள போட்டிகள்
x
தினத்தந்தி 16 Feb 2023 12:15 AM IST (Updated: 16 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கடலூரில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான தடகள போட்டிகள் நடைபெற்றது.

கடலூர்

2022-23-ம் ஆண்டுக்கான கடலூர் மாவட்ட அளவில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் கடந்த 13-ந்தேதி முதல் கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் தொடங்கி நடந்து வருகிறது. இதில் 12 வயது முதல் 19 வயது வரையுள்ள பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சிலம்பம், கபடி, கூடைப்பந்து, இறகுப்பந்து, கால்பந்து, வாலிபால், கிரிக்கெட் உள்ளிட்ட குழு விளையாட்டு போட்டிகள் நடந்தது. நேற்று பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான ஆக்கி, தடகள போட்டிகள் நடந்தது. இதில் 100 மீ, 400 மீ, 1500 மீ உள்ளிட்ட பல்வேறு ஓட்டப்பந்தயங்களும், குண்டு, வட்டு, ஈட்டி எறிதல், நீளம், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட தடகள போட்டிகளும் நடந்தது. இது தவிர மேசைப்பந்து போட்டிகளும் நடந்தது. இதில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இன்று (வியாழக்கிழமை) நீச்சல் போட்டி நடக்கிறது.

நாளை (வெள்ளிக்கிழமை), நாளை மறுநாள் (சனிக்கிழமை) கல்லூரிகளில் பயிலும் 17 வயது முதல் 25 வயது வரையுள்ள மாணவ-மாணவிகளுக்கான சிலம்பம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகளும், 19-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை ஆக்கி, தடகளம், மேசைப்பந்து போட்டிகளும், பொதுப்பிரிவில் 15 வயது முதல் 35 வயது வரையுள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கு குழு மற்றும் தடகள விளையாட்டு போட்டிகளும் நடக்கிறது. 24,25-ந் தேதிகளில் அரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டிகளும், 27-ந்தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகளும் நடக்கிறது.


Next Story