ஆத்தூர் சந்தன மாரியம்மன் கோவில் திருவிழா


ஆத்தூர்   சந்தன மாரியம்மன் கோவில் திருவிழா
x
தினத்தந்தி 17 Sept 2022 12:15 AM IST (Updated: 17 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆத்தூர் சந்தன மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது.

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

ஆத்தூர் சந்தன மாரியம்மன் கோவில் கொடை விழா நடைபெற்றது. முதல் நாளில் வாஸ்து சாந்தி பூஜை, இரவு மாகாப்பு தீப ஆராதனையும் நடந்தது. இரண்டாம் நாள் தாமிரபரணி ஆற்று நதியிலிருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து வீதிஉலா வந்தனர். தொடர்ந்து சிறப்பு அபிஷேகமும், உச்சிகால பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது. மூன்றாம் நாள் காலையில் அம்பாள் மற்றும் பரிவார தேவதைகளுக்கு படைப்பு, தீபாராதனை நடைபெற்றது. மதியம் கோவில் கொடை விழா நிறைவு பெற்றது.


Next Story