ஏ.டி.எம். மையத்தில் நூதன திருட்டு


ஏ.டி.எம். மையத்தில் நூதன திருட்டு
x

சாத்தூரில் ஏ.டி.எம். மையத்தில் நூதனமான முறையில் கார்டை திருடி பணம் அபேஸ் செய்யப்பட்டது.

விருதுநகர்

சாத்தூர்,

சாத்தூர் அருகே அமீர்பாளையத்தை சேர்ந்தவர் ராமலட்சுமி (வயது 41), இவரும் இவரது கணவரும் நேற்று முன்தினம் இரவு சாத்தூர் மாரியம்மன் கோவில் அருகில் உள்ள ஒரு வங்கி ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுக்க சென்றுள்ளனர். தங்களுக்கு பணம் எடுக்கத் தெரியாததால் வெளியில் நின்று கொண்டிருந்த 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் பணம் எடுத்து தருவதாக கூறி ராமலட்சுமி ஏ.டி.எம். கார்டை வாங்கி கொண்டு ஏ.டி.எம். மையத்தின் உள்ளே சென்றார். பின்னர் அவர் திரும்ப வந்து தங்கள் கார்டு வேலை செய்யவில்லை எனக் கூறி மற்றொரு ஏ.டி.எம். கார்டை கொடுத்துவிட்டு சென்றுள்ளார். இதையடுத்து ராமலட்சுமி வங்கிக்கு சென்று கேட்டபோது இது வேற ஒரு வங்கியின் ஏ.டி.எம். கார்டு என்று கூறி உள்ளனர்.

இதற்கிடையே ராமலட்சுமியின் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி வங்கி கணக்கில் இருந்து ரூ.34 ஆயிரம் எடுக்கப்பட்டதும் தெரிய வந்தது. இதுகுறித்து ராமலட்சுமி சாத்தூர் நகர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story