ஏ.டி.எம். மையத்தில் கிழிந்த 500 ரூபாய் நோட்டுகள் வந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி


ஏ.டி.எம். மையத்தில் கிழிந்த 500 ரூபாய் நோட்டுகள் வந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
x

கடையநல்லூரில் தனியார் ஏ.டி.எம். மையத்தில் இருந்து கிழிந்த 500 ரூபாய் நோட்டுகள் வந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தென்காசி

அச்சன்புதூர்:

கடையநல்லூர் அருகே பண்பொழி சாலையில் தனியார் நிறுவன ஏ.டி.எம் மையம் உள்ளது. இங்கு நேற்று மேலக்கடையநல்லூர் பஜனை மட தென்வடல் தெருவைச் சேர்ந்த கருப்பசாமி மனைவி மாரியம்மாள் என்பவர் ரூ.9 ஆயிரம் எடுத்தார். அப்போது அந்த ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து வந்த 500 ரூபாய் 14 நோட்டுகள் கிழிந்து பேப்பர் வைத்து ஒட்டப்பட்ட நிலையில் இருந்தன. மேலும் சில நோட்டுகள் கரையான் அரித்த நோட்டுகளாகவே இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், உடனே தாம் கணக்கு வைத்திருந்த வங்கி மேலாளரிடம் புகார் கூறியதற்கு சம்பந்தப்பட்ட ஏ.டி.எம். எங்கள் வங்கியை சேர்ந்தது இல்லை என்பதால் வங்கியிலும் அவர் புகார் செய்ய முடியாமல் தவித்தார். தொடர்ந்து தனியார் நிறுவன ஏ.டி.எம். ஊழியரிடம் புகார் தெரிவித்தும் அவர் இதுகுறித்து நெல்லை மண்டல அலுவலகத்தில் புகார் செய்ய கூறிவிட்டு சென்றார். இதேபோல் மற்ற வாடிக்கையாளர்கள் சிலருக்கும் கிழிந்த ரூபாய் நோட்டுகள் வந்ததாக தெரிவித்தனர்.


Next Story