ஏ.டி.எம். கார்டை மாற்றி கொடுத்து ஓய்வுபெற்ற அரசு அதிகாரியிடம் ரூ.40 ஆயிரம் மோசடி


ஏ.டி.எம். கார்டை மாற்றி கொடுத்து ஓய்வுபெற்ற அரசு அதிகாரியிடம் ரூ.40 ஆயிரம் மோசடி
x

ஏ.டி.எம். கார்டை மாற்றி கொடுத்து ஓய்வுபெற்ற அரசு அதிகாரியிடம் ரூ.40 ஆயிரம் மோசடி செய்த 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

விருதுநகர்

ஏ.டி.எம். கார்டை மாற்றி கொடுத்து ஓய்வுபெற்ற அரசு அதிகாரியிடம் ரூ.40 ஆயிரம் மோசடி செய்த 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

ரூ.40 ஆயிரம்

விருதுநகர் என்.ஜி.ஓ. காலனி அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன்(வயது 71). பணி ஓய்வு பெற்ற அரசு அதிகாரியான இவர் விருதுநகர் அரசு வங்கியில் உள்ள ஏ.டி.எம். மையத்திற்கு ஓய்வூதிய பணத்தை எடுப்பதற்காக வந்தார். ஏ.டி.எம். எந்திரத்தில் ஓய்வூதிய பணம் வரவாகி விட்டதா என்று தெரிவதற்காக ஏ.டி.எம். கார்டை எந்திரத்தில் போட்ட போது அருகில் நின்று கொண்டிருந்த 2 நபர்கள் தாமாகவே முன்வந்து ஓய்வூதிய பணம் வரவு வைக்கப்பட்டு விட்டது என தெரிவித்து ஏ.டி.எம். கார்டை கொடுத்து விட்டு சென்று விட்டனர்.

உடனடியாக சீனிவாசன் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி பணம் எடுப்பதற்காக முயன்ற போது தவறான கடவுச்சொல் என பதில் வந்ததையடுத்து தனது வங்கி சேமிப்பு கணக்கு புத்தகத்தை வங்கியில் கொடுத்து பதிவுசெய்த போது இவரது வங்கி கணக்கில் இருந்து மூன்று தடவையாக ரூ.40 ஆயிரம் எடுத்துள்ளது தெரியவந்தது.

வேறு கார்டு

அவர் உடனடியாக ஏ.டி.எம். கார்டை பார்த்தபோது அதில் சி.பாலசுப்பிரமணியம் என்ற பெயர் இருந்தது. ஏ.டி.எம்.மையத்தில் நின்று கொண்டிருந்த நபர்கள் மோசடி செய்யும் எண்ணத்துடன் சீனிவாசனிடம் வேறு ஏ.டி.எம். கார்டை கொடுத்து விட்டு சென்றது தெரிய வந்தது.

இது பற்றி சீனிவாசன் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story