ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்த கொத்தனார் கைது


ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்த கொத்தனார் கைது
x
தினத்தந்தி 27 Jun 2023 1:01 AM IST (Updated: 27 Jun 2023 3:12 PM IST)
t-max-icont-min-icon

ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்த கொத்தனார் கைது செய்யப்பட்டார்.

திருச்சி

கல்லக்குடி அருகே காணக்கிளியநல்லூர் அருகே உள்ள பெருவளப்பூர் கிராமத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஏ.டி.எம். மையம் உள்ளது. இங்கு அமைக்கப்பட்டு இருந்த அலாரம் நேற்று முன்தினம் திடீரென ஒலித்ததால் அருகில் இருந்தவர்கள் இதுகுறித்து வங்கி மேலாளருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்த வங்கி மேலாளர் ஏ.டி.எம். மையத்திற்கு வந்து பார்த்தபோது ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் இதுகுறித்து காணக்கிளியநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது பெருவளப்பூர் கிராமம் வடக்கு தெருவை சேர்ந்த சூரியகுமார்(வயது 28) என்பது தெரிய வந்தது. மேலும் விசாரணையில், கொத்தனாரான இவர் மது அருந்த பணம் இல்லாததால் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, லால்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கிளை சிறையில் அடைத்தனர்.


Next Story