ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றவர் கைது


ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றவர் கைது
x

வாழப்பாடி அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து ெகாள்ளையடிக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

சேலம்

வாழப்பாடி:-

வாழப்பாடி அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து ெகாள்ளையடிக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கொள்ளையடிக்க முயற்சி

வாழப்பாடி அருகே உள்ள பேளூரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, பேளூரில் அயோத்தியாப்பட்டணம் நெடுஞ்சாலையில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஏ.டி.எம். மையத்தின் அருகில் இருந்து ஒரு நபர் போலீசாரை கண்டதும் வேகமாக ஓடினார்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் ஏ.டி.எம். மையத்துக்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு ஒரு மர்ம நபர் எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சித்து கொண்டிருந்தது தெரியவந்தது. இதைகண்ட போலீசார் அந்த நபரை சுற்றி வளைத்து கையும் களவுமாக மடக்கி பிடித்தனர்.

கைது

தொடர்ந்து அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் வாழப்பாடி அருகே குறிச்சி ஊராட்சி கோணஞ்செட்டியூரை சேர்ந்த ராமச்சந்திரன் (வயது 22) என்பதும், தப்பி ஓடியவர் ஈரோடு பகுதியை சேர்ந்த விக்னேஷ் சிவன் (26) என்பதும் தெரியவந்தது. ெதாடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமச்சந்திரனை கைது செய்தனர். தப்பி ஓடிய விக்னேஷ் சிவனை வலைவீசி தேடி வருகிறார்கள்.

இவர்கள் 2 பேர் மீதும் ஆடு திருடுதல், பேட்டரி திருடுதல் போன்ற பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. போலீசார் சரியான நேரத்தில் ரோந்து சென்றதால் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த பணம் தப்பியது.

ஏ.டி.எம். மையத்தில் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story