ஆத்மா திட்ட ஆலோசனை குழு கூட்டம்


ஆத்மா திட்ட ஆலோசனை குழு கூட்டம்
x

ஆத்மா திட்ட ஆலோசனை குழு கூட்டம்

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

திருமருகல் வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் 2022-23-ம் ஆண்டிற்கான வட்டார ஆத்மா திட்ட விவசாய ஆலோசனை குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருமருகல் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) கலைச்செல்வன் முன்னிலை வகித்தார். இதில் உதவி தோட்டக்கலை துறை அலுவலர் செல்லபாண்டியன், பொதுப்பணித்துறை அலுவலர் பக்கிரிசாமி, .திருமருகல் வட்டார துணை வேளாண்மை அலுவலர் தெய்வகுமார், வட்டார தொழில் நுட்ப மேலாளர் மகேஸ்வரி ஆகியோர் பேசினர். முன்னதாக திருமருகல் வட்டார வாய்க்கால் தூர்வாரும் பணிக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திருமருகல் வட்டார ஆத்மா திட்ட விவசாய ஆலோசனை குழு தலைவர் செல்வ.செங்குட்டுவன் மற்றும் உறுப்பினர்கள் நன்றி தெரிவித்தனர். முடிவில் உதவி தொழில்நுட்ப மேலாளர் பிரபு நன்றி கூறினார்.


Next Story