ஆவுடையார்கோவில் ஆத்மநாத சுவாமி ஆனி திருமஞ்சன தேரோட்டம்...!


ஆவுடையார்கோவில் ஆத்மநாத சுவாமி ஆனி திருமஞ்சன தேரோட்டம்...!
x

ஆவுடையார்கோவில் ஆத்மநாத சுவாமி ஆனி திருமஞ்சன தேரோட்ட விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஆவுடையார்கோவில்,

திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான ஆவுடையார்கோவில் ஆத்மநாதசுவாமி கோவில் ஆனி திருமஞ்சன திருவிழா கடந்த 25-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி பத்து நாட்கள் நடைபெறுகிறது.

திருவிழா முன்னிட்டு மாணிக்கவாசகர் தினமும் காலை, மாலை இரண்டு வேளையும் வீதி உலா வந்தார். ஏழாமநாள் திருவிழாவில் குருத்தோலை சப்பரத்தில் வெள்ளி இடப வாகனத்தில் மாணிக்கவாசகர் வலம் வந்தார்.

சிறப்பு நிகழ்ச்சியாக ஒன்பதாம் நாள் திருவிழாவில் தேரோட்டம் இன்று நடைபெற்றது. தேரில் மாணிக் கவாசகர் சுவாமி. வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தேரை ஆவுடையார்கோவில் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து பெருந்திரளான பக்தர்கள் வருகை தந்து வடம் பிடித்து இழுத்தனர். அப்போது ஆத்மநாதா, மாணிக வாசகா என்று சொல்லி தேரை இழுத்தனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை ஆத்மநாத சுவாமி கோவில் நிர்வாகிகள் செய்திருந்தார்கள். பாதுகாப்ப ஏற்பாடுகளை அறந்தாங்கி டி.எஸ்.பி தினேஷ்குமார் தலைமையில் ஆவுடையார்கோவில் போலீசார் செய்திருந்தனர். தேர் காலை 10 மணிக்கு புறப்பட்டு நான்கு வீதிகளிலும் சுற்றிவந்தது.


Next Story