பாதிரியார் மீது தாக்குதல்


பாதிரியார் மீது தாக்குதல்
x

தர்மபுரியில் பாதிரியார் மீது தாக்கயவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தர்மபுரி

தர்மபுரி அழகாபுரியை சேர்ந்தவர் வில்லியம்ஸ் (வயது 55). அந்த பகுதியில் உள்ள தேவாலயத்தில் பாதிரியாராக உள்ளார். இவர் பிரார்த்தனையில் ஈடுபட்டபோது அங்கு வந்த 2 பேர் தகராறு செய்து பாதிரியாரை தாக்கினர். இந்த தாக்குதல் குறித்து பாதிரியார் வில்லியம்ஸ் தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story