டிரைவர், கண்டக்டர் மீது தாக்குதல்


டிரைவர், கண்டக்டர் மீது தாக்குதல்
x
தினத்தந்தி 16 Oct 2022 12:15 AM IST (Updated: 16 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

வேப்பனப்பள்ளி அருகே இறுதி ஊர்வலத்தின் போது பஸ் மீது மாலை வீசியதால் ஏற்பட்ட தகராறில் டிரைவர், கண்டக்டர் மீது தாக்கப்பட்டனர்.

கிருஷ்ணகிரி

வேப்பனப்பள்ளி:

வேப்பனப்பள்ளி அருகே உள்ள மாதேப்பள்ளி கிராமத்திற்கு நேற்று அரசு பஸ் வந்து கொண்டு இருந்தது. அப்போது அதேபகுதியை சேர்ந்த இறந்த ஒருவரின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. இதனால் டிரைவர் சாலையில் பஸ்சை நிறுத்தினார். அப்போது அப்பகுதியில் வந்து கொண்டிருந்த வாலிபர்கள் பஸ்சின் மீது பூமாலையை வீசினர். இதை டிரைவர் கிருஷ்ணன், கண்டக்டர் ராமலிங்கம் ஆகியோர் கண்டித்துள்ளனர். இதனால் இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வாலிபர்கள் டிரைவர், கண்டக்டர் ஆகியோரை தாக்கினர். அவர்கள் வேப்பனப்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் வேப்பனப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல் சம்பவம் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதை வைத்து டிரைவர், கண்டக்டரை தாக்கிய நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story