கடத்தூர் அருகே மது குடித்தவர்களை தட்டிக்கேட்ட தொழிலாளிக்கு கத்திக்குத்து


கடத்தூர் அருகே மது குடித்தவர்களை தட்டிக்கேட்ட தொழிலாளிக்கு கத்திக்குத்து
x
தினத்தந்தி 26 Oct 2022 12:15 AM IST (Updated: 26 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

மொரப்பூர்:

கடத்தூர் அருகே உள்ள வேடியூரை சேர்ந்தவர் முருகேசன் மகன் வெற்றிவேல் (வயது 23). இவர் கேரளாவில் வெல்டிங் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். வெற்றிவேல் தீபாவளி பண்டிகை கொண்டாட சொந்த ஊருக்கு வந்தார். சம்பவத்தன்று ஊரின் மையப்பகுதியில் உள்ள அரச மரத்தடியில் தாண்டவன் (57), பெருமாள் (60), செல்லப்பன் (45), சந்திரபிள்ளை (35) ஆகியோர் மது குடித்தனர். இதனை வெற்றிவேல் தட்டிக்கேட்டார். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த அதே பகுதியை சேர்ந்த தாண்டவன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வெற்றிவேலை வயிற்றில் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த வெற்றிவேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story