தலைமை ஆசிரியை மீது தாக்குதல்; வாலிபர் கைது
தலைமை ஆசிரியையை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
விருதுநகர்
ஆலங்குளம்,
விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் அருகே கொங்கன்குளத்தில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் அருகில் சில இளைஞர்கள் மது குடித்துவிட்டு காலி பாட்டில்களை பள்ளியின் முன்பு போட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த பள்ளியின் தலைமை ஆசிரியை ஜெயகிருஷ்ணா, இது தொடர்பாக கொங்கன்குளத்தை சேர்ந்த ஐஸ் பாண்டியன் மகன் மாரிச்சாமி (வயது 24) என்பவரை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மாரிச்சாமி தலைமை ஆசிரியை ஜெயகிருஷ்ணாவை கம்பால் தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின்பேரில் ஆலங்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாபு மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரிச்சாமியை கைது ெசய்தனர்.
Related Tags :
Next Story