டாஸ்மாக் கடை ஊழியரை தாக்கி மதுபாட்டில்களை தூக்கிச்சென்ற மர்ம நபர்கள்


டாஸ்மாக் கடை ஊழியரை தாக்கி மதுபாட்டில்களை தூக்கிச்சென்ற மர்ம நபர்கள்
x

திண்டுக்கல்லில் டாஸ்மாக் கடை ஊழியரை தாக்கி மதுபாட்டில்களை மர்மநபர்கள் தூக்கிச் சென்றனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல்லில் வாணிவிலாஸ் சிக்னல் அருகே தாடிக்கொம்பு சாலையில் டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. புத்தாண்டையொட்டி நேற்று முன்தினம் அந்த கடையில் மதுபான விற்பனை படுஜோராக நடந்தது. பின்னர் இரவு கடையின் கதவை உள்பக்கமாக பூட்டிவிட்டு கடைக்குள் ஊழியர்கள் மதுவிற்பனை தொடர்பான கணக்குகளை பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் 3 பேர், கதவை தட்டி மதுபானம் கேட்டனர். ஆனால் ஊழியர்கள் கதவை திறக்கவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்தனர்.

பின்னர் அங்கிருந்த ஊழியர்களில் ஒருவரை சரமாரியாக தாக்கிவிட்டு கடையில் வைக்கப்பட்டிருந்த 2 மதுபான பாட்டில்களை தூக்கிக்கொண்டு தப்பிச்சென்றனர். இந்த காட்சிகள் அனைத்தும் கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் வீடியோவாக பதிவானது. பின்னர் அந்த வீடியோ வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது. இதுகுறித்து அறிந்ததும் திண்டுக்கல் மேற்கு போலீசார் டாஸ்மாக் கடைக்குள் ஊழியரை தாக்கிவிட்டு மதுபான பாட்டில்களை தூக்கிச்சென்றவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story