ஹார்டுவேர் கடையில் திருடிய வாலிபரை கட்டிப்போட்டு தாக்குதல்


ஹார்டுவேர் கடையில் திருடிய வாலிபரை கட்டிப்போட்டு தாக்குதல்
x

திருவண்ணாமலை பஸ் நிலையம் அருகே ஹார்டுவேர் கடையில் திருடிய வாலிபரை கட்டி வைத்து அடித்து உதைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த வாலிபரை போலீசார் மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை

திருவண்ணாமலை பஸ் நிலையம் அருகே ஹார்டுவேர் கடையில் திருடிய வாலிபரை கட்டி வைத்து அடித்து உதைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த வாலிபரை போலீசார் மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

கட்டி வைத்து அடித்து உதைத்தனர்

திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையம் அருகில் மத்தலங்குளத் தெரு உள்ளது. இந்த பகுதியில் ஏராளமான கடைகள் உள்ளன. காலை முதல் இரவு வரை எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியாக இது உள்ளது. இங்கு உள்ள ஒரு ஹார்டுவேர் கடையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வாலிபர் ஒருவர் பொருட்கள் வாங்குவது போல் வந்து யாருக்கும் தெரியாமல் மரம் அறுக்கும் சிறிய எந்திரத்தை திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று காலை மீண்டும் அந்த நபர் அதே கடைக்கு வந்துள்ளார். ஏற்கனவே கண்காணிப்பு கேமராவில் முகத்தை பார்த்து வைத்திருந்த கடைக்காரர்கள் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அந்த வாலிபரை பிடித்து கட்டிப்போட்டு சரமாரியாக அடித்து உதைத்தனர். இதனால் நேற்று காலை அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்த திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வரைந்து சென்று அந்த வாலிபரை மீட்டு விசாரணை நடத்தினர். அதில் அவர் போளூர் பகுதியைச் சேர்ந்த அன்பு என்பது தெரியவந்தது.

சிகிச்சை

பொதுமக்கள் அடித்து உதைத்ததில் அந்த நபருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக போலீசார் சேர்த்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story