கூரியர் நிறுவன ஊழியரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு


கூரியர் நிறுவன ஊழியரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
x

கூரியர் நிறுவன ஊழியரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம்

விழுப்புரம்,

விழுப்புரம் ஜி.ஆர்.பி. தெருவை சேர்ந்தவர் அன்புராஜ் (வயது 29). இவர் கூரியர் நிறுவனம் ஒன்றில் டெலிவரி செய்பவராக பணியாற்றி வருகிறார். விழுப்புரம் பூந்தோட்டத்தை சேர்ந்த விஜி என்பவர் ஆன்லைனில் செல்போன் ஆர்டர் செய்துள்ளார்.

அதை அன்புராஜ் எடுத்துச்சென்று விஜியிடம் முகவரி கேட்கும்போது விஜி, முகவரியை மாற்றி மாற்றி கூறி அன்புராஜை அலைய விட்டுள்ளார். கடைசியாக விழுப்புரம் பூந்தோட்டம் பாலம் அருகில் வந்த அன்புராஜ், விஜியிடம் ஏன் என்னை இவ்வாறு அலையவிட்டாய் என கேட்டார்.

இதில் ஆத்திரமடைந்த விஜி, அவரது மகன்கள் சந்துரு, சூர்யா ஆகியோர் சேர்ந்து அன்புராஜை திட்டி கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து அன்புராஜ், விழுப்புரம் மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் விஜி உள்ளிட்ட 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story