வங்கி பெண் அதிகாரி மீது தாக்குதல்


வங்கி பெண் அதிகாரி  மீது தாக்குதல்
x

வங்கி பெண் அதிகாரி மீது தாக்குதல் நடத்திய கணவர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி

திருச்சி கீழவண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் இளையராஜா (வயது 42). இவர் மின்வாரிய அலுவலகத்தில் சீனிவாசநகர் பிரிவில் உதவி பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி நித்யா (36). இவர் மத்திய பஸ்நிலையம் அருகே உள்ள ஒரு வங்கியில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் திருச்சி கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்தில் நித்யா ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், கடந்த ஏப்ரல் மாதம் 13-ந்தேதி இரவு 7.30 மணிக்கு நான் வேலை பார்க்கும் வங்கிக்கு எனது கணவர், அவருடைய தம்பி பாலமுருகனுடன் வந்து, இடம் வாங்குவதற்கு கடன் வாங்கி கொடுக்கும்படி தகாதவார்த்தைகளால் திட்டியதுடன், ஹெல்மெட்டால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். பின்னர் கடந்த மாதம் 27-ந்தேதி மதியம் மீண்டும் பாலமுருகன், தனது தந்தை மதியழகனுடன் வந்து, இவள் திருடி, எங்கள் வீட்டில் இருந்து எல்லா நகைகளையும் திருடிக்கொண்டு வந்துவிட்டாள் என்று கூறி தகாதவார்த்தைகளால் திட்டினர். எனவே அவர்கள் 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. அதன்பேரில், இளையராஜா மற்றும் அவருடைய தம்பி பாலமுருகன், தந்தை மதியழகன் ஆகியோர் மீது கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story