கட்டிட காண்டிராக்டர் மீது தாக்குதல்


கட்டிட காண்டிராக்டர் மீது தாக்குதல்
x
தினத்தந்தி 18 Sept 2022 12:30 AM IST (Updated: 18 Sept 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

கட்டிட காண்டிராக்டர் மீது தாக்குதல்

திண்டுக்கல்

வடமதுரை அருகே உள்ள வி.சித்தூரை சேர்ந்தவர் ரஞ்சிதம் (வயது 40). கட்டிட காண்டிராக்டர். இவர் தனக்கு சொந்தமான இடத்தில் பேவர் பிளாக் கற்கள் தயாரிக்கும் நிறுவனம் தொடங்க முடிவு செய்தார். இதற்கான மின்இணைப்பு கேட்டு மின்வாரிய அலுவலகத்தில் மனு கொடுத்து இருந்தார். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி என்பவர் ரஞ்சிதத்துக்கு மின் இணைப்பு கொடுக்கக்கூடாது என்று மின்வாரிய அலுவலகத்தில் ஆட்சேபனை கடிதம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து அறிந்து அதிர்ச்சியடைந்த ரஞ்சிதம், ஈஸ்வரமூர்த்தியிடம் ஆட்சேபனை தெரிவித்தது குறித்து கேட்டார். அப்போது தனக்கு ரூ.10 ஆயிரம் கொடுத்தால் அந்த கடிதத்தை திரும்ப பெறுவதாக ஈஸ்வரமூர்த்தி கூறியதாக தெரிகிறது. அதற்கு ரஞ்சிதம் மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த ஈஸ்வரமூர்த்தி தனது உறவினர்களுடன் சேர்ந்து ரஞ்சிதத்தை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதில் காயமடைந்த ரஞ்சிதம் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

பின்னர் இது குறித்து ரஞ்சிதம் வடமதுரை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் ஈஸ்வரமூர்த்தி அவருடைய மனைவி குஷ்பு, தாய் வள்ளியம்மாள் ஆகிய 3 பேர் மீது வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story