படிக்கட்டில் பயணம் செய்ததை கண்டித்த பஸ் கண்டக்டர் மீது தாக்குதல்; பிளஸ்-2 மாணவர்கள் 3 பேர் கைது


படிக்கட்டில் பயணம் செய்ததை கண்டித்த பஸ் கண்டக்டர் மீது தாக்குதல்; பிளஸ்-2 மாணவர்கள் 3 பேர் கைது
x

படிக்கட்டில் பயணம் செய்ததை கண்டித்த பஸ் கண்டக்டர் மீது தாக்குதல்; பிளஸ்-2 மாணவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்

மதுரை


மதுரை ஆனையூர் எஸ்.ஆலங்குளம் பாரதிபுரம் 9-வது தெருவை சேர்ந்தவர் செல்வ ஆனந்த் (வயது 48).இவர் அரசு டவுன் பஸ்சில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை இவர் பணிபுரிந்த டவுன் பஸ் தல்லாகுளம் வழியாக கோரிப்பாளையம் ஏ.வி. மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது பஸ்சில் பயணம் செய்த பள்ளி மாணவர்கள் சிலர் படிக்கட்டில் தொங்கியபடி வந்தனர். அவர்களை கண்டக்டர் செல்வஆனந்த் உள்ளே வருமாறு கூறினார். ஆனால் அந்த மாணவர்கள் பஸ்சின் உள்ளே வர மறுப்பு தெரிவித்தனர். மேலும் அவர்கள் ஆத்திரத்தில் பஸ் கண்டக்டரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து கண்டக்டர் மதிச்சியம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிளஸ்-2 மாணவர்கள் 3 பேரை கைது செய்தனர்.


Related Tags :
Next Story