முன்னாள் ராணுவவீரர் மீது தாக்குதல்


முன்னாள் ராணுவவீரர் மீது தாக்குதல்
x

முன்னாள் ராணுவவீரர் தாக்கப்பட்டார்.

திருநெல்வேலி

பாளையங்கோட்டை கே.டி.சி. நகரை சேர்ந்தவர் முத்தையா மகன் ராஜேஷ் (வயது 46). முன்னாள் ராணுவ வீரர். அதே பகுதியை சேர்ந்தவர் சார்லஸ் (26). குப்பை கொட்டியது தொடர்பாக இவர்கள் 2 பேருக்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த ராஜேஷ், அவரின் மனைவி மாரியம்மாள் உள்ளிட்ட 3 பேரை சார்லஸ் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் பாளையங்கோட்டை தாலுகா போலீசார் சார்லஸ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story