விவசாயி மீது தாக்குதல்


விவசாயி மீது தாக்குதல்
x
தினத்தந்தி 31 Aug 2023 1:45 AM IST (Updated: 31 Aug 2023 1:45 AM IST)
t-max-icont-min-icon

போடி அருகே விவசாயி மீது தாக்குதலில் ஈடுபட்டவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி

போடி அருகே உள்ள நாகலாபுரத்தை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 42). விவசாயி. அதே பகுதியை சேர்ந்தவர் சென்றாயன் (50). இவர், மகளிர் சுய உதவி குழு மூலமாக தனது மனைவி பெயரில் கோழி வளர்க்க தமிழக அரசின் மானியம் பெற்றுள்ளார். தொகையை பெற்று கொண்ட அவர் அதற்கான பணிகளை ஏதும் செய்யவில்லை. இதுகுறித்து ரவிக்குமார் தேனி மாவட்ட கலெக்டரிடம் புகார் கொடுத்தார். இதையறிந்த சென்றாயன் நேற்று முன்தினம், நாகலாபுரத்தில் விநாயகர் கோவில் அருகே வந்த ரவிக்குமாரை அவதூறாக பேசி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக போடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story