விவசாயி மீது தாக்குதல்


விவசாயி மீது தாக்குதல்
x

தஞ்சை அருகே விவசாயி மீது தாக்குதல் நடத்திய முதியவர் கைது செய்யப்பட்டார்.

தஞ்சாவூர்

வல்லம்;

தஞ்சை அருகே உள்ள ராயமுண்டான்பட்டியை சேர்ந்தவர் விவசாயி பாக்கியராஜ் (வயது 45). விவசாயி. அதே பகுதியை சேர்ந்தவர் செல்லதுரை (65). இவர்கள் இருவருக்கும் இடையே நிலப்பிரச்சனை இருந்தது. சம்பவத்தன்று புதுக்குடியில் பாக்கியராஜ் மற்றும் செல்லதுரை ஆகியோரிடையே நிலம் சம்பந்தமாக வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த செல்லத்துரை அருகில் கிடந்த பெரிய கல்லால் பாக்கியராஜை தாக்கி உள்ளார். இதில் படுகாயமடைந்த பாக்கியராஜை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்த புகாரின் பேரில் செங்கிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்லத்துரையை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story