விவசாயி மீது தாக்குதல்


விவசாயி மீது தாக்குதல்
x
தினத்தந்தி 26 Jun 2023 1:35 AM IST (Updated: 26 Jun 2023 5:07 PM IST)
t-max-icont-min-icon

விவசாயி மீது தாக்குதல் நடத்தி கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது வழக்குப் பதிவு

தஞ்சாவூர்

பூதலூர் அருகே உள்ள புதுப்பட்டி நடுத்தெருவில் வசிப்பவர் சாமிநாதன் (வயது51). விவசாயி. இவரை, அதே தெருவைச்சேர்ந்த மதியழகன் (50), சாமிவேல் (28) ஆகிய 2 பேரும் சேர்ந்து முன்விரோதத்தில் தாக்கி அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் காயமடைந்த சாமிநாதன் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து சாமிநாதன் பூதலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் மதியழகன், சாமிவேல் ஆகிய 2 பேர் மீது பூதலூர் போலீஸ் ஏட்டு பிரகாஷ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story