நாய் குரைத்ததால் பெண்ணை திட்டி, வீடு மீது தாக்குதல்


நாய் குரைத்ததால் பெண்ணை திட்டி, வீடு மீது தாக்குதல்
x

நாய் குரைத்ததால் பெண்ணை திட்டி, வீடு மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

அரியலூர்

தா.பழூர்:

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கோடாலிக்கருப்பூர் ஆயிபாளையம் பகுதியில் வசித்து வரும் குமாரின் மனைவி தேவி(வயது 38). இவரது வீட்டில் நாய்கள் வளர்த்து வருவதாக ெதரிகிறது. அதே பகுதியில் வசித்து வருபவர் சுந்தரேசன் மகன் மகேஷ். அவர் வீட்டிலும் நாய் வளர்த்து வருவதாக தெரிகிறது. சம்பவத்தன்று மகேஷ் தனது நாயை அழைத்துக்கொண்டு தேவி வீட்டின் வழியாக சென்றபோது, தேவி வீட்டில் இருந்த நாய், மகேஷ் அழைத்துச் சென்ற நாயை பார்த்து குரைத்ததாக கூறப்படுகிறது.

இதில் ஆத்திரம் அடைந்த மகேஷ், அவரது மனைவி சங்கீதா மற்றும் அவரது உறவினர்கள் ராமசாமி, சிவக்குமார், புருஷோத், சின்னம்மாள், சேகர், சரஸ்வதி ஆகியோர் தேவி வீட்டிற்கு சென்று, உங்கள் நாய் எப்படி எங்கள் நாயை பார்த்து குரைக்கலாம் என்று கேட்டு தகாத வார்த்தைகளால் திட்டி, வீட்டின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தி சேதப்படுத்தியதாகவும், மிரட்டிவிட்டு சென்றதாகவும் தேவி, தா.பழூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் தம்பதி உள்பட 8 பேர் மீதும் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story