கரூரில் வருமானவரி அதிகாரிகள் மீது தாக்குதல்:"பணி செய்யவிடாமல் தடுத்து ஆவணங்களை பறித்துச்சென்றனர்"-19 பேர் ஜாமீனை ரத்து செய்யக்கோரிய வழக்கில் வக்கீல் வாதம்


கரூரில் வருமானவரி அதிகாரிகள் மீது தாக்குதல்:பணி செய்யவிடாமல் தடுத்து ஆவணங்களை பறித்துச்சென்றனர்-19 பேர் ஜாமீனை ரத்து செய்யக்கோரிய வழக்கில் வக்கீல் வாதம்
x

கரூரில் வருமானவரி அதிகாரிகள் மீது தாக்குதல்: “பணி செய்யவிடாமல் தடுத்து ஆவணங்களை பறித்துச்சென்றனர்”-19 பேர் ஜாமீனை ரத்து செய்யக்கோரிய வழக்கில் வக்கீல் வாதம்

மதுரை


வருமான வரித்துறையின் உதவி இயக்குனர் யோக பிரியங்கா மற்றும் அதிகாரிகள் சிலர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

கரூரைச் சேர்ந்த சிலர் மீது வருமானவரி முறைகேடு புகார்கள் வந்தன. அதன்பேரில் அவர்களின் வீடுகளில் கடந்த மே மாதம் 25-ந்தேதி சோதனை நடத்தினோம். அங்கு கூடிய கூட்டத்தினர் எங்களை தாக்கினர்.

இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் 19 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து சிலரை கைது செய்தனர். 19 பேருக்கு ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் வழங்கி கரூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு உத்தரவிட்டது. அதை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர்.

இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது வருமானவரித்துறை சார்பில் ஆஜரான வக்கீல், மத்திய அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்து, அரசு ஆவணங்களை எடுத்துச்சென்றது, அதிகாரிகளிடம் இருந்த ஆவணங்கள், பென்டிரைவ் உள்ளிட்டவற்றை பறித்து சென்றது, அதிகாரிகளை தாக்கியது ஆகிய காரணங்களை கவனிக்காமல் கீழ் கோர்ட்டு ஜாமீன் அளித்துள்ளது. அதை ரத்து செய்ய வேண்டும் என்று வாதாடினார். பின்னர் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் பதில் அளிக்க கால அவகாசம் கோரப்பட்டது.

இதனையடுத்து நீதிபதி, இந்த வழக்கு விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.


Related Tags :
Next Story