சட்டக்கல்லூரி மாணவர் மீது தாக்குதல்
ஜவ்வாது மலையில் சட்டக்கல்லூரி மாணவர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ஜவ்வாதுமலை புதூர்நாடு சேம்பரை கிராமம் பகுதியை சேர்ந்தவர் அனுமன் (வயது 50). இவரது மகன் பிரவீன் குமார் (19), சென்னை சட்டக் கல்லூரியில் படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் மாவட்ட கவுன்சிலர் வைகுந்தராவ். இவரின் சகோதரர் பிரசாந்த் மற்றும் சாம்பசிவம் மகன் செஞ்சுபதி. இவர்களுக்கும், அனுமனுக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக பிரசாந்த், செஞ்சுபதி ஆகியோர் பிரவீன் குமாரை கட்டையால் தாக்கி, நெஞ்சு பகுதியில் கடித்து காயம் ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த பிரவீன் குமார் புதூர்நாடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி பெற்று திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து திருப்பத்தூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.