திருப்பத்தூரில் வரி வசூல் செய்ய சென்ற நகராட்சி ஊழியர் மீது தாக்குதல்


திருப்பத்தூரில் வரி வசூல் செய்ய சென்ற நகராட்சி ஊழியர் மீது தாக்குதல்
x

திருப்பத்தூரில் வரிவசூல் செய்ய சென்ற நகராட்சி ஊழியரை தாக்கிய தி.மு.க. பிரமுகர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

திருப்பத்தூர்

திருப்பத்தூரில் வரிவசூல் செய்ய சென்ற நகராட்சி ஊழியரை தாக்கிய தி.மு.க. பிரமுகர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

வரி வசூல்

திருப்பத்தூர் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய குடிநீர் மற்றும் சொத்து வரிகளை வசூலிக்க நகராட்சி ஆணையாளர் ஜெயராமராஜா உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் நகராட்சியில் வருவாய் உதவியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்று, தற்போது தற்காலிக வருவாய் உதவியாளராக பணி புரிந்து வரும் ரவி, நிரந்தர ஊழியரான வருவாய் உதவியாளர் கோகுல் குமார் ஆகிய இருவரும் பிள்ளையார் கோவில் தெரு பகுதியில் குடிநீர் மற்றும் சொத்து வரி வசூல் செய்ய சென்றுள்ளனர். அப்போது பாக்கி வைத்துள்ள நபர்களுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

அப்போது ஆட்டோவில் வந்த இரண்டு தி.மு.க. பிரமுகர்கள், நரகாட்சி ஊழியர்கள் 2 பேரையும் தி.மு.க. பிரமுகர் ஒருவர் அழைத்து வரும்படி கூறியதாக கூறி அவர்களை ஆட்டோவில் ஏற்றினர்.

தாக்குதல்

பின்னர் அந்த நபர்கள் இருவரும் சேர்ந்து, யார் வீட்டில் வந்து சொத்து வரி, குடிநீர் வரி கேட்கிறாய் எனகேட்டு ரவியை தாக்கி உள்ளனர். பின்னர் அலுவலகத்திற்கு சென்று தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த ரவி திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் திருப்பத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் ரவி மற்றும் நகராட்சி ஆணையாளர் ஜெயராமராஜா ஆகியோர் புகார் அளித்துள்ளனர். சொத்து வரி, குடிநீர் வரி வசூலிக்க சென்றவரை தி.மு.க. பிரமுகர் அடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story