ஊராட்சி மன்ற தலைவர் மீது தாக்குதல்
ஊராட்சி மன்ற தலைவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
திருச்சி
திருவெறும்பூர்:
திருவெறும்பூர் அருகே உள்ள கீழமுல்லைக்குடியை சேர்ந்தவர் சண்முகம் மனைவி கோகிலா(வயது 35). இவர் கீழமுல்லைக்குடி ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். இந்நிலையில் கீழமுல்லைகுடி பகுதியில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த கழிவுநீர் வடிகால் அந்தப்பகுதியை சேர்ந்த மகேஸ்வரி என்பவரது விவசாய நிலத்திற்கு அருகே செல்வதாக கூறப்படுகிறது. இதனால் மகேஸ்வரி எனது நிலத்தின் அருகே கழிவுநீர் வாய்க்கால் வந்தால் விவசாயம் செய்ய முடியாது எனக்கூறி மகேஸ்வரியும், அவரது கணவர் தனபாலும்(50) ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு சென்று கோகிலாவிடம் தகராறு செய்து அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் திருவெறும்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story