ஊராட்சி மன்ற தலைவர் மீது தாக்குதல்
ஊராட்சி மன்ற தலைவர் மீது தாக்குதல்
குடவாசல்
குடவாசல் அருகே உள்ள திருக்களம்பூர் ஊராட்சி தலைவராக முருகையன் உள்ளார். இவர் அந்த பகுதியில் ஊராட்சி சார்பில் சாலை பணியில் ஈடுபட்டு வருகிறார். நேற்றுமுன்தினம் அதே ஊரை சேர்ந்த பஞ்சமூர்த்தி மகன்கள் கலை சூர்யா, விக்னேஸ்வரன், ராஜாங்கம் மகன் அசோக்குமார் ஆகிய 3 பேரும் ஒரு டிராக்டரில் செங்கல் ஏற்றி கொண்டு முருகையன் வேலைசெய்யும் சாலை வழியாக சென்றுள்ளனர். அப்போது முருகையன் இங்கு பணி நடைபெறுவதால் இந்த வழியாக செல்ல கூடாது என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும் சேர்ந்து முருகையனை தாக்கினர். இதில் காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து குடவாசல் போலீசில் முருகையன் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாநிதி, ஊராட்சி மன்ற தலைவரை தாக்கிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.