தோட்ட உரிமையாளர் மீது தாக்குதல்


தோட்ட உரிமையாளர் மீது தாக்குதல்
x
தினத்தந்தி 17 May 2023 12:15 AM IST (Updated: 17 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளம் அருகே தோட்ட உரிமையாளர் மீது தாக்குதல் நடத்திய இரண்டு பேரை போலீசார் தேடிவருகின்றனர்.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

சாத்தான்குளம் அருகே உள்ள வேலன்புதுக்குளத்தை சேர்ந்த சண்முகசுந்தரம் மகன் கண்ணன் (வயது 47). இவர் தூத்துக்குடியில் உள்ள ஆல் இண்டியா வானொலியில் டெக்னிசியனாக பணி புரிந்து வருகிறார். இவருக்கு சொந்தமான தோட்டம் வேலன்புதுக்குளத்தில் உள்ளது. இந்த தோட்டத்தில் உள்ள இளநீர் ஒன்று ரூ.19 என கோமானேரியை சேர்ந்த நல்லக்கண்ணு மகன் சுரேஷ் என்பவருக்கு குத்தகை கொடுத்துள்ளார். அவர், அதற்கான பணத்தை கொடுக்கவில்லையாம். இந்நிலையில் சம்பவத்தன்று வேலன்புதுக்குளம் வழுக்கு பாலத்தில் சுரேஷூம், அவரது நண்பர் வேலன்புதுக்குளத்தை சேர்ந்த ராமையா மகன் முத்துபாண்டி என்பவரும் நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த கண்ணன், இளநீர் குத்தகை பணத்தை சுரேஷிடம் கேட்டுள்ளார். அவர்கள் இளநீருக்கு ரூ.13 தருவதாக தெரிவித்துள்ளனர். இதில் ஏற்பட்ட வாய்த்தகராறில் ஆத்திரமடைந்த சுரேஷ், முத்துபாண்டி ஆகியோர் கண்ணனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தலைமறைவாகி விட்டனராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சுரேஷ், முத்துப்பாண்டி ஆகியோரை தேடி வருகின்றனர்.


Next Story