ரோந்து பணியில் ஈடுப்பட்ட போலீசார் மீது தாக்குதல்
ரோந்து பணியில் ஈடுப்பட்ட போலீசார் மீது தாக்குதல் நடத்திய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
வாணியம்பாடியை அடுத்த அம்பலூர் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் மதுகுமார் மற்றும் வினோத்குமார் ஆகியோர் வாணியம்பாடி அடுத்த புத்துகோவில் அருகே தேசியநெடுஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்தனர். அப்போது புத்துகோவில் மேம்பாலம் அருகே மதுஅருந்திக் கொண்டிருந்த சில இளைஞர்கள் சாலையில் வருவோர் மற்றும் வாகன ஓடடிகளிடம் தகராறில் ஈடுப்பட்டு வந்தனர்.
அப்போது ரோந்து பணியில் இருந்த போலீசார் மதுகுமார், வினோத்குமார் ஆகியோர் மதுபோதையில் இருந்த 4 இளைஞர்களை அப்புறப்படுத்த முயன்ற போது அவர்கள் போலீசாரை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி்விட்டனர்.
இதுகுறித்து அம்பலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து புத்துகோவில் பகுதியை சேர்ந்த பூவரசன் (24), தெக்குப்பட்டு பகுதியை சேர்ந்த வசந்த் (23) ஆகியோரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள கேத்தாண்டப்பட்டி பகுதியை சேர்ந்த நந்தகோபால் (22), சந்தோஷ் (22) ஆகிய இருவரை தேடி வருகின்றனர்.