தனியார் பஸ் கண்டக்டர் மீது தாக்குதல்


தனியார் பஸ் கண்டக்டர் மீது தாக்குதல்
x

வடமதுரை அருகே தனியார் பஸ் கண்டக்டர் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திண்டுக்கல்

வடமதுரை அருகே உள்ள குப்பமுத்துப்பட்டியை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 30). இவர், தனியார் பஸ்சில் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் ரவிக்குமார், தென்னம்பட்டியில் பஸ்சை நிறுத்தி பயணிகளை இறக்கி விட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த தென்னம்பட்டியை சேர்ந்த சதீஷ், எதற்காக இந்த இடத்தில் பஸ்சை நிறுத்தினாய் என்று கேட்டு ரவிக்குமாரிடம் தகராறு செய்தார். மேலும் ரவிக்குமாரை தாக்கி அவர் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து வடமதுரை போலீஸ் நிலையத்தில் ரவிக்குமார் புகார் செய்தார். அதன்பேரில் சதீஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story