சசிகலா புஷ்பா வீடு மீது தாக்குதல்: 3 தி.மு.க. கவுன்சிலர்கள் உள்பட 13 பேர் மீது வழக்கு


தினத்தந்தி 24 Dec 2022 12:15 AM IST (Updated: 24 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் சசிகலா புஷ்பா வீடு மீது தாக்குதல் நடத்தியசம்பவம் தொடர்பாக 3 தி.மு.க. கவுன்சிலர்கள் உள்பட 13 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தூத்துக்குடி

சசிகலா புஷ்பா வீடு, கார் மீது நடந்த தாக்குதல் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட பா.ஜனதா பிரசார பிரிவு செயலாளர் ரத்தினராஜ் என்ற கனி, சிப்காட் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் ராமகிருஷ்ணன், இசக்கிராஜா உள்பட 3 தி.மு.க. கவுன்சிலர்கள், ரவீந்திரன் உள்ளிட்ட 13 பேர் மீது அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து சேதப்படுத்தியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதில் கவுன்சிலர் ராமகிருஷ்ணனை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story