டாஸ்மாக் ஊழியர் மீது தாக்குதல்; பெயிண்டர் கைது


டாஸ்மாக் ஊழியர் மீது தாக்குதல்; பெயிண்டர் கைது
x

நெல்லையில் டாஸ்மாக் ஊழியர் மீது தாக்குதல் நடத்திய பெயிண்டர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

நெல்லை:

நெல்லை பாளையங்கோட்டை செயின்ட் பால்ஸ் ரோட்டை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 46). இவர் மகாராஜநகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் ஊழியராக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இவர் வேலையில் இருந்தபோது வாலிபர் ஒருவர் மதுபாட்டில் வாங்க வந்தார். அவர் ஒரு குறிப்பிட்ட மதுபாட்டிலை சொல்லி கேட்டுள்ளார். ஆனால் ஜெயக்குமார் வேறு மதுபாட்டிலை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த அந்த வாலிபர் மதுபாட்டிலை எடுத்து ஜெயக்குமாரை தலையில் தாக்கிவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினார். விசாரணையில் ஜெயக்குமாரை தாக்கியவர் பாளையங்கோட்டை தியாகராஜ நகரை சேர்ந்த இசக்கி (29) என்பதும், பெயிண்டராக உள்ளார் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து இசக்கியை போலீசார் நேற்று கைது செய்தனர்.


Next Story