கோவில் கட்டுவது தொடர்பான தகராறில் பட்டையதாரர்-மகன் மீது தாக்குதல்


கோவில் கட்டுவது தொடர்பான தகராறில் பட்டையதாரர்-மகன் மீது தாக்குதல்
x

கோவில் கட்டுவது தொடர்பான தகராறில் பட்டையதாரர்-மகன் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

திருச்சி

மணிகண்டம்:

மணிகண்டம் அருகே உள்ள செங்குறிச்சியை சேர்ந்தவர் செல்வம்(வயது 55). பட்டையதாரர். இவரது மகன் மகேந்திரன்(25). செங்குறிச்சியில் கோவில் கட்டுவது தொடர்பாக பட்டையதாரர் செல்வத்திற்கும், அப்பகுதியை சேர்ந்த சிலருக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இது தொடர்பாக செல்வம் தரப்பிற்கும், அதே ஊரை சேர்ந்த மூக்கன் மகன் சுப்பிரமணியன் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது சுப்பிரமணியன், இளையராஜா, சண்முகம், மணிகண்டன், மூக்கன் ஆகிய 5 பேரும் சேர்ந்து செல்வம், மகேந்திரன் ஆகியோரை தகாத வார்த்தையால் பேசி, கட்டையால் தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த செல்வம், மகேந்திரன் ஆகியோரை அப்பகுதியினர் மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் மணிகண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் வழக்குப்பதிவு செய்து 5 பேரையும் தேடி வருகிறார்.


Next Story